Posts

Showing posts from June, 2020

தீப்பெட்டி

Image
30 வருடங்களுக்கு முன் தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் தீப்பெட்டி ஒட்டாத வீடுகளே கிடையாது எனலாம். சிறுவர் சிறுமியர், பெண்கள் தினசரி சுவர் ஓரத்தில் அமர்ந்து குண்டு பல்பின் சோகை மஞ்சளொளியில் அடிப்பெட்டி ஒட்டிக்கொண்டு, கட்டை அடுக்கிக்கொண்டு இருப்பார்கள். வானொலி ஒலித்துக்கொண்டிருக்கும். தீப்பெட்டி ஆபிசுக்கு பெண்களை வேலைக்கு வரவைக்கவென்றே ஆம்பிளிபயர்கள் வாங்கிவைக்கப்பட்டன. ஒலிச்சித்திரங்கள் ஒலித்தன. பெண்களின் கையில் நாலுகாசு நடமாட வைத்தது தீப்பெட்டி. வீட்டில் ஆண்பிள்ளைக்கு வேலையில்லை என்றால் சமாளித்து நிற்க தீப்பெட்டிதான் உதவியது.  தீப்பெட்டி ஒட்டுவதில் மூன்று பிரிவுகள் உண்டு. அடிப்பெட்டி, மேப்பெட்டி, கட்டை அடுக்குதல். கட்டையில் ஒரு இஞ்சு அகலமும் அரை மீட்டர் நீளமும் உள்ள மரச்சக்கைகளில் 50 குறுக்குக்கோடுகள் போடப்பட்டிருக்கும். ஐம்பது சக்கைகள் கொண்டது ஒரு கட்டை. இந்தச் சக்கைகளின் இரு ஓரங்களிலும் துளைகள் போடப்பட்டிருக்கும். ஐம்பது சக்கைகளை மருந்து நிரப்பாத தீக்குச்சிகளை அடுக்கி நிரப்பி (ஒரு சக்கைக்கு 50 குச்சிகள் வீதம்) இருபுறமும் கம்பிகளுக்குள் சக்கைகளைச் செருகி கொண்டி போட்டு இறுக்க...