Posts

Showing posts from August, 2019

தண்டியலங்காரம்: பொதுவியல்

தண்டியலங்காரம் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட காவ்யாதர்சம், காவ்ய தர்ப்பணம், காவ்யப் பிரகாசம், சரசுவதி கண்டாபரணம், சாகித்ய தர்ப்பணம், சந்திராலோகம், சித்திரமீமாஞ்சை, குவலயானந்தம் போன்ற நூல்களில் சில தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தண்டியாசிரியரால் காவ்யாதர்சம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தண்டியலங்காரம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்து பாகுபாடுடையது. எழுத்து சொல் இரண்டுக்கும் நன்னூல். பொருளிலக்கணத்துக்கு நம்பியகப்பொருளும் வெண்பாமாலையும். யாப்புக்கு யாப்பருங்கலக்காரிகை.  அணியிலக்கணத்துக்கு தண்டியலங்காரம். அணி என்பது அலங்காரம், அலம், ஆபரணம், வன்மை, நிறைவு, செயல் என்ற அர்த்தங்களைக் கொண்டுள்ளது. தண்டியலங்காரம் மூன்று பிரிவுகளைக் கொண்டது. பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல். பொதுவியலில் முத்தகம், குளகம் போன்ற பாவகைகள் மற்றும் செறிவு, தெளிவு போன்ற குணவகைகளும் கூறப்பட்டுள்ளன. பொருளணியியலில் தன்மை, உவமை வருகின்றன. சொல்லணியியலில் சித்திரகவி வகைகளும், மடக்கு வகைகளும், பாக்களில் வரக்கூடாத பிழைகளும் கூறப்பட்டுள்ளன. பொதுவியல் செய்யுளானது முத்தகம், ...