Posts

Showing posts from July, 2019

ஒரிஸ்ஸா – சுற்றுலா - 1

Image
ஏற்கெனவே 5 ஆண்டுகளுக்குமுன் நண்பர்களோடு ஒரிஸ்ஸா சென்றுவந்திருக்கிறேன். லிங்கராஜா கோவிலும் அக்கோவிலைச் சுற்றியுள்ள சின்னச் சின்ன கோவில்கள், அங்கே விற்கப்படும் இனிப்புகள், கோனார்க் சூரியக்கோவில் இவை திரும்பத் திரும்ப நினைவில் வந்தபடி இருந்தன. வருடத்திற்கொருமுறை குடும்பத்தினரை சுற்றுலா கூட்டிச் செல்வதாக உள்ள திட்டத்தின்படி இந்தவருடம் ஒரிஸ்ஸாவைத் தேர்ந்தெடுத்தேன். இரண்டு மாதங்களுக்கு முன்பே இரயில், விமானச் சீட்டுகளைப் பதிந்தாயிற்று. 4 நாட்கள் என்று திட்டமிட்ட பயணம். விமானச்சீட்டு விலை போவதற்கு விலை குறைவாயிருந்தால், திரும்பி வரும் நாளில் அதிகக்கட்டணம் இருக்கிறது. திரும்பி வரும் நாளை கணக்கு வைத்தால் கிளம்பும் நாளில் அதிகக் கட்டணம். கடைசியில் 6 நாட்கள் சுற்றுலா என்று முடிவாயிற்று. குடும்பத்தோடு செல்லும்போது நமக்கு அத்தனை சுதந்திரம் கிடைப்பதில்லை. எல்லோருக்கும் ஒத்த ஒரு முடிவை நோக்கி நாம் நகர்ந்தபடியே இருக்கவேண்டும். சும்மா ஒரு நடை தனியே சுற்றி வருவதுகூட கடினமாகிவிடும். இந்தப் பயணத்தில் ஏனோ ஒருவித ஏக்கம், தனிமை, சுதந்திரம், துறவு இவைதான் மனதில் ஆடின. காரணம் சுந்தர். இந்தப் பையனைப் பற்...