Posts

புதுமைப்பித்தன் படைப்புகள் – ஒரு மீள்பார்வை

  ”எழுத்து எழுத்துன்னு வாழ்ந்துட்டு எங்களுக்குன்னு எதுவும் சேர்க்கலையே” என்று மரணத்துக்குச் சிலநாட்களுக்கு முன் புதுமைப்பித்தனிடம் அவரது மனைவி கமலா கேட்டபோது, “நான் எழுதின நுாற்றுக்கணக்கான சிறுகதைகள் என்ற சொத்தையும், புதுமைப்பித்தன் மனைவி குழந்தை என்ற அடையாளத்தையும் விட்டுட்டு போறேன். என் அடையாளமும், படைப்புகளும் உங்களை காப்பாற்றும்” என்று சொல்லியிருக்கிறார் புதுமைப்பித்தன். அந்த நம்பிக்கையை நாம் சிதைத்துவிடவில்லை.   இன்று தமிழ் நவீன இலக்கியத்தின் பிதாமகனாக வீற்றிருக்கிறார் அவர். நவீன இலக்கிய வாசனையற்றிருந்த காலத்தில்கூட புதுமைப்பித்தன் தான் வாழ்ந்த காலத்திலேயே கவனம் பெற்ற எழுத்தாளராக இருந்தார் என்றுதான் சொல்லவேண்டும். அவர் இறப்புக்கு முன்னரே ஐந்து சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. அதில் ஒன்று இரண்டாம் பதிப்பும் கண்டிருந்தது. 108 சிறுகதைகள், 15 கவிதைகள், ஒரு முடிவுறா நாவல். இவை தவிர்த்து உலக இலக்கியங்களிலிருந்து 57 சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். புதுமைப்பித்தன் என்ற விருப்பப் புனைப்பெயர் தவிர்த்து ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், ஊழியன், கபாலி, சுக்ராச்சார...

வேண்டும் விடுதலை!

Image
ஒரு தனியார் பள்ளியில் தலைமையாசிரியையாகப் பணியாற்றிய குடும்பத் தோழி ஒருவர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். கடந்த ஒரு மாதமாக வேலையிலிருந்து தற்காலிக விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார். காரணம் பள்ளி இயங்கியபோது இருந்ததைவிட தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடப்பதினால் அதிகப் பணியழுத்தம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார். எப்போது வேண்டுமானாலும் திடீர் திடீரென ஆன்லைனில் கலந்துரையாடல் நடத்துவது, ஒருங்கிணைக்கும் வேலைகள் என குடும்பத்தைக் கவனிக்க முடியாத அளவு வேலைப்பளு.  ஆனால் நான் சொல்லவந்த விஷயம் இதுவல்ல. இவர் முன்பு ஒரு ஐ.டி. நிறுவனத்தில் உற்பத்தித் துறையில் பணியாற்றியவர். திருமணத்துக்குப் பின் கணவர் அரசு வங்கியில் பணியாற்றுவதால் அந்த வேலையை விட்டுவிட்டு பள்ளியில் தலைமையாசிரியையாகச் சேர்ந்தார். இப்போது பணியில் இல்லாமல் இருக்கும்போது அவ்வப்போதைய அன்றாடச் செலவுகளுக்குக் கணவரைச் சார்ந்திருக்கும் நிலை. இது தனக்கு என்னவோ போல இருப்பதாகவும், வீட்டில் தண்டமாய் இருக்கும் உணர்வை ஏற்படுத்துவதாகவும் சொன்னார். வீட்டிலிருந்தபடியே பணியாற்ற முடியுமா, அப்படியென்றால் திரும்பவும் ஐ.டி. சார்ந்த வேலை வாய்ப்பு கிடைக்குமா, ...

தீப்பெட்டி

Image
30 வருடங்களுக்கு முன் தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் தீப்பெட்டி ஒட்டாத வீடுகளே கிடையாது எனலாம். சிறுவர் சிறுமியர், பெண்கள் தினசரி சுவர் ஓரத்தில் அமர்ந்து குண்டு பல்பின் சோகை மஞ்சளொளியில் அடிப்பெட்டி ஒட்டிக்கொண்டு, கட்டை அடுக்கிக்கொண்டு இருப்பார்கள். வானொலி ஒலித்துக்கொண்டிருக்கும். தீப்பெட்டி ஆபிசுக்கு பெண்களை வேலைக்கு வரவைக்கவென்றே ஆம்பிளிபயர்கள் வாங்கிவைக்கப்பட்டன. ஒலிச்சித்திரங்கள் ஒலித்தன. பெண்களின் கையில் நாலுகாசு நடமாட வைத்தது தீப்பெட்டி. வீட்டில் ஆண்பிள்ளைக்கு வேலையில்லை என்றால் சமாளித்து நிற்க தீப்பெட்டிதான் உதவியது.  தீப்பெட்டி ஒட்டுவதில் மூன்று பிரிவுகள் உண்டு. அடிப்பெட்டி, மேப்பெட்டி, கட்டை அடுக்குதல். கட்டையில் ஒரு இஞ்சு அகலமும் அரை மீட்டர் நீளமும் உள்ள மரச்சக்கைகளில் 50 குறுக்குக்கோடுகள் போடப்பட்டிருக்கும். ஐம்பது சக்கைகள் கொண்டது ஒரு கட்டை. இந்தச் சக்கைகளின் இரு ஓரங்களிலும் துளைகள் போடப்பட்டிருக்கும். ஐம்பது சக்கைகளை மருந்து நிரப்பாத தீக்குச்சிகளை அடுக்கி நிரப்பி (ஒரு சக்கைக்கு 50 குச்சிகள் வீதம்) இருபுறமும் கம்பிகளுக்குள் சக்கைகளைச் செருகி கொண்டி போட்டு இறுக்க...

ஹொய்சாளம் பயணக்கட்டுரை - 1

Image
ஹொய்சாளம் - பயணக்கட்டுரை 1 மதுரையிலிருந்து இரவு எட்டு மணிக்கு மைசூர் எக்ஸ்பிரஸ் கிளம்பியது. திருமணத்திற்குப் பிறகு நான்காண்டுகள் நண்பர்களுடன் பிரயாணம் சாத்தியப்படவில்லை. அதற்கு முன் வருடம்தோறும் பொங்கலையொட்டி எங்காவது சென்றுவிடுவோம். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பிரயாணிக்கிறோம். மொத்தம் எங்களுக்கு நான்கு நாட்கள் இருக்கின்றன. இரண்டு நாட்கள் ஹொய்சாளர் காலச் சிற்பங்களைப் பார்த்துவருவதாகத் திட்டம். மீதி இரண்டுநாட்கள் முதுமலை மற்றும் ஊட்டி. என் கல்லூரிக் காலத்து நண்பர்கள் கண்ணன் மற்றும் அமர்நாத்துடன் பிரயாணிக்கிறேன். கண்ணன் சென்னையில் மெடிக்கல் ஷாப் வைத்திருக்கிறார். அமர்நாத் அரசலுவல். நானும் அமர்நாத்தும் மதுரையிலிருந்து கிளம்ப, கன்ணன் சென்னையிலிருந்து கிளம்பினான். இரயிலில் பிச்சைக்காரர்கள் பத்துநிமிடத்துக்கொருமுறை வந்தபடியே இருந்தனர். திருநங்கைகள் ஐந்தாறுமுறை வந்திருப்பார்கள். டாய்லெட் படுமோசம். சில டாய்லெட்டுகள் ஓவர்ஃப்ளோ ஆகி நாறடித்துக் கொண்டிருந்தது. கடுமையான குளிர். பெங்களூர் தாண்டி ஒரு ஸ்டேஷனில் இறங்கிப்பார்த்தேன். தோசையளவுக்கு இட்லி வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். வாங்கிச்சா...

லைக்கியல்

10/8/2016ல் எழுதியது. இதில் இன்னும் நிறைய எழுத ஆசையிருந்தது. எதற்கு வெட்டிவேலை, அந்தத் துறை சார்ந்த நபர்கள் செய்யட்டும், நமக்கு வேறு வேலையிருக்கிறது என்று விட்டுவிட்டேன். லைக்கியல்  ஆச்சரியமாக இருக்கிறது. உலக மக்கள்தொகை (710 கோடி). 2016-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புப்படி சமூக வலைத்தளங்களில் உள்ள கணக்குகளின் எண்ணிக்கை 317 கோடியாம். இதில் 2016ல் மட்டும் 17.5 கோடிபேர் புதிதாய் கணக்கு தொடங்கியிருக்கிறார்கள். இத்தனைபேர் கூட்டமாகச் சேர்ந்து என்ன செய்கிறோம்? இதன் அவசியம் என்ன? உலகின் பாதி அன்றாடம் இதில் உலவிக்கொண்டிருக்கையில் இதுபற்றி பேசவேண்டியது அவசியமாகிறது. முன்னர் பெருங்கதையாடல்கள் இருந்தன. முன்னுதாரணத்தலைவர்கள் இருந்தார்கள். அவர்களைப் பற்றி எல்லாமே பேசப்பட்டுவிட்டன. சாமானியனின் அகம் தான் தான் என்று குதித்துக்கொண்டிருக்கிறது. இது சாமானியரின் காலம். இதுவே சொல்லப்படாத கதையாக நிரப்பப்படாமல் இருக்கிறது. இலக்கியங்கள் சாமானியனைப் பற்றிப் பேச ஆரம்பித்து பல காலமாயிற்று. ஒவ்வொரு சாமானியனுக்கும் ஒரு கதையிருக்கிறது. சொல்ல விசயமிருக்கிறது. தன் குரல் கேட்கப்படவேண்டுமென்று நினைக்கிறான்....

மொழிபெயர்ப்பு கவிதைகள்

அட்ரியன் மிசெலின் (1932-2008) கவிதைகள் குறித்து: இவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இடதுசாரி. இடதுசாரிகளைப் போலவே, கவிதையைத் தொடங்குமுன் முதலில் மேடையில் ஏறிக்கொள்கிறார். பின்னர் பெருங்கூட்டத்தை நோக்கிப் பாட ஆரம்பிக்கிறார். வே.நி. சூர்யாவின் புதிய சிற்றிதழுக்காக மொழிபெயர்த்தது. இதழில் வரவில்லை என்று நினைக்கிறேன். இந்தக் கவிதைகள்  எளிமையானவை. நேரடியானவை. தமிழகத்தில் இதுமாதிரி எழுத மனுஷ்யபுத்திரன் தொடங்கி நூற்றுக்கணக்கான கவிஞர்கள் இருக்கிறார்கள் ஒருநாள் சத்தியம் என்னை அடித்துக் கீழே தள்ளியது அந்த விபத்துக்குப் பிறகு நான் இப்படித்தான் நடக்கிறேன் எனவே என் கால்களை பசைத்தாளால் ஒட்டுங்கள் உங்கள் வியட்நாம் பொய்களைச் சொல்லுங்கள் கடிகாரத்தின் அலாரம் வலியில் அலறுகிறது என்னை நானே கண்டுணர முடியவில்லை; நான் திரும்பத் தூங்கப் போய்விட்டேன் எனவே என் காதுகளை வெள்ளியால் பூசுங்கள் கால்களை பசைத்தாளால் ஒட்டுங்கள் உங்கள் வியட்நாம் பொய்களைச் சொல்லுங்கள் கண்களை மூடும்போதெல்லாம் தீப்பிழம்புகளைக் காண்கிறேன் மார்பிளால் ஆன தொலைபேசிப் புத்தகம் செய்து எல்லாப் பெயர்களையும் அதில் செதுக...