Posts

Showing posts from January, 2020

கதை விளையாட்டு - சிறுகதை

1 இரவு நேரம். மின்சாரம் இல்லை. வெளியே சூறைக்காற்றுடன் மழை பேயாட்டம் போடுகிறது. வானம் உடைந்து விழப்போவதுபோல் இடியோசை. ’பயமாருக்குப்பா’ என்றபடி கலைவாணியும் நவீனனும் அருகில் ஒட்டிக் கொண்டனர். இருவருக்கும் பயத்துடன் கூடிய ஆர்வம். என் மனைவி சொந்தக்கார வீட்டுச் சடங்கு நிகழ்வுக்காக அவள் அம்மாவுடன் வெளியூர் சென்றிருக்கிறாள். ஒருமணிநேரமாகி விட்டது. மழை விடுகிறபாடில்லை. ‘அப்பா ஒரு கதை சொல்லப்போறேன்.’ கலைவாணி, ‘பேய்க்கதையா?’ ‘ம்ம், இல்லை. இது போனமாசம் எனக்கு வந்த ஒரு கனவு’ நவீனன், ‘போனமாசம் கண்ட கனவை யாராவது ஞாபகம் வச்சிருப்பாங்களா?’ ‘சில கனவு மறக்கமுடியாதுடா’ ‘சரி சொல்லுங்க’ ‘ஒருநாள் நீங்க ரெண்டுபேர், அப்பா அம்மா எல்லாம் குட்நைட் சொல்லிட்டுத் தூங்கப்போறோம். அப்போ…’ திடீரென்று எனக்கு முழிப்பு தட்டியது. ஒரே இருட்டு. புள்ளி புள்ளியாய் ஒளித்துகள்கள். நட்சத்திரங்கள். கையை நீட்டித் தொட்டுவிடலாம்போல, அழகழகாய் ஜொலிக்கிறது. வீட்டுக்குள்தானே படுத்திருந்தோம், எப்படி நட்சத்திரங்கள் என்று திடுக்கிட்டு உங்கள் அம்மாவைக் கூப்பிடுகிறேன். பதிலில்லை. நவீனனைக் கூப்பிடுகிறேன். பதிலில்லை. அருகி...